என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகைகள் கொள்ளை"
பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்ற பின்னர் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.
பின்னர் மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கோவிலினுள் புகுந்த கொள்ளையர்கள் முத்தாரம்மன், முத்தீஸ்வரர் சன்னதிகளின் பூட்டை உடைத்து சாமி, அம்மன் சிலைகளில் இருந்த 2 ஜோடி கம்மல், ஒரு ஜோடி பொட்டு, ஒரு ஜோடி மூக்குத்தி உள்பட ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் 8 வெள்ளி காப்புகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அம்மன் சன்னதி, சாமி சன்னதியில் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை:
கோவை ராமநாதபுரம் சந்திப்பு அருகே வணிக வளாகத்தின் முதல் மாடியில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு போத்தனூரை சேர்ந்த ரேணுகா(28), செல்வபுரத்தை சேர்ந்த திவ்யா(23) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்தார். இதைப் பார்த்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்? என்று விசாரித்தனர்.
அதற்கு பதிலளிக்காத வாலிபர் திடீரென்று ரேணுகா, திவ்யா ஆகியோரை சரமாரியாக அடித்து தாக்கினார். இதில் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். உடனே அந்த வாலிபர் நிறுவனத்துக்குள் இருந்த லாக்கர்களை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்தார்.
நிறுவன மேஜைகளில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.
வெகுநேரம் கழித்து ரேணுகா, திவ்யா ஆகியோருக்கு மயக்கம் தெளிந்தது. அவர்கள் கண் விழித்து பார்த்த போது நிறுவனத்தின் லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து சென்றனர்.
மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நிதிநிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி ஒரு வாலிபர் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதேபோல வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள கடைகளின் முன்புறமும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் கொள்ளையடித்த வாலிபர் உள்ளே செல்லும் காட்சிகள் தெளிவாக தெரிந்தது.
நிதிநிறுவன அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் விவரங்களை சேகரித்தனர். லாக்கர்களில் இருந்து மொத்தம் ரூ.2 கோடி மதிப்புடைய 812 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தனி ஆளாக ஒரே ஒரு வாலிபர் துணிச்சலாக இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கலாம் அல்லது நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் துணையாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #jewelryrobbery
புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் சங்கிலியாண்டி. ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி நாகம்மாள் (வயது60). இவரது மகன்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இங்கு சங்கிலியாண்டியும், நாகம்மாளும் தனியாக வசித்து வந்தனர்.
நாகம்மாள் தனது 30பவுன் தங்க நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக உணவு வைக்கும் ஹாட் பாக்ஸில் போட்டு பீரோவுக்கு கீழ் உள்ள பாத்திரங்களுடன் சேர்த்து வைத்துள்ளார். நேற்று பகலில் அவர் சமையல் செய்து கொண்டிருக்கும் போது பாத்திரத்தை எடுக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக நாகம்மாள் வீட்டின் முன் அறைக்கு வந்தார்.
அப்போது ஒரு வாலிபர் ஹாட்பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடி கொண்டிருந்தார். நாகம்மாளை பார்த்ததும் நகைகளை எடுத்து கொண்டு ஓடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த வாலிபர் தப்பியோடி விட்டார். திருட்டு போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.
தனது வீட்டில் திருடிய வாலிபர், பக்கத்து வீட்டை சேர்ந்த சுவாமி என்ற விஜயகுமார் போல் இருந்ததாக நாகம்மாள் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறினார். இந்த திருட்டு சம்பவம் குறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அது தொடர்பாக வழக்குப்பதிந்து சுவாமி என்ற விஜயகுமாரை (28) தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். வெளியூருக்கு ஏதேனும் அந்த வாலிபர் தப்பி செல்லலாம் என்று கருதிய போலீசார் பஸ் நிலையங்களில் கண்காணித்து வந்தனர். அப்போது விஜயகுமார் வெளியூர் செல்வதற்காக தென்காசி பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் நகைகள் எதுவும் இல்லை. இதையடுத்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். அப்போது நாகம்மாள் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த நகைகளை தென்காசி குளக்கரையில் உள்ள புதரில் வீசியதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று தேடினர். அப்போது அங்கு திருட்டு போன 30 பவுன் தங்க நகைகளும் சிதறிக்கிடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதிக்கு வேறுயாரும் வராததால் கொள்ளை போன நகைகளை போலீசார் மீட்டனர். பின்பு விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே போலீசார் துரிதமாக செயல்பட்டு திருட்டில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தது மட்டுமின்றி நகைகளையும் மீட்டு விட்டனர்.
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33). இவர் நெல்லை டவுன் மேல ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது தந்தை லட்சுமணன். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ஆகும்.
நேற்று இரவு மணிகண்டனும், நகைக்கடை ஊழியர்களும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவு அங்கு வந்த கொள்ளையர்கள் அதிக சத்தம் கேட்காதபடி முன்பக்க கிரீல் பூட்டையும், கதவையும் உடைத்தனர். உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் சோக்கேஸ் கண்ணாடிகளை உடைத்து அதில் இருந்த தங்க செயின், நெக்லஸ், வளையல்கள் உள்பட 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை மூட்டை கட்டி கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்று காலை கடை உரிமையாளர் மணிகண்டன் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது முன்பக்க பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சின்ன சின்ன மோதிரங்கள், கம்மல்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
கொள்ளையர்கள் நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சோகேசை உடைத்த போது ஒரு கொள்ளையனின் கையில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கிடந்த கண்ணாடி துண்டுகளில் ரத்தம் சிதறி இருந்தது. அதை போலீசார் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள்.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது நகைக்கடையையும், அதன் அருகே உள்ள மெயின் ரோட்டையும் சுற்றி வந்தது. கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளை நடந்த இடத்தில் சேகரித்த தடயங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த நகைக்கடை டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ளது. மேலும் அந்த பகுதியில் மெயின் ரோட்டிலும் நகைக்கடையிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவத்தில் பல கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களை கூண்டோடு பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.நகர் முசா தெருவில் வசித்து வருபவர் பால கிருஷ்ணன். டாக்டர். இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்க-வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஒத்தக்கடை, சண்முகா நகரைச் சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 41). இவர் மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இன்று அதிகாலை இவர் வீட்டில் இருந்தபோது காரில் 5 பேர் வந்தனர். அனைவரும் டிப்டாப் உடையுடன், அடையாள அட்டை அணிந்திருந்தனர்.
சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து வந்துள்ளோம். நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது. வீட்டை சோதனையிட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பெத்துராஜின் செல்போனையும் பிடுங்கிக் கொண்டனர். வீட்டில் இருந்த பெத்துராஜின் தாயார் மற்றும் மகனை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
5 பேரும் வீட்டில் இருந்த பீரோவை திறந்து செயின், வளையல், மோதிரம் உள்ளிட்ட 50 பவுன் நகைகளையும், வீட்டு பத்திரத்தையும் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பெத்துராஜிடம் நகைக்கு உரிய கணக்கை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தெரிவித்துவிட்டு நகைகளை வாங்கிச் செல்லுமாறு கூறிய 5 பேரும் விறுவிறு என்று வெளியேறி விட்டனர்.
சந்தேகம் அடைந்த பெத்துராஜ் இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் விசாரித்தபோது, டிப்டாப் உடை அணிந்த வாலிபர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
இந்த நூதன கொள்ளை தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு தலைமறைவான 5 டிப்டாப் வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெருந்துறை:
காஞ்சிக்கோவில் அருகே உள்ள கருங்கரடு, கரிச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 70). இங்கு இவருக்கு சொந்தமான விவசாய தோட்டமும், வீடும் உள்ளது. வாரத்துக்கு ஒருநாள் மட்டும் இந்த வீட்டுக்கு சின்னம்மாள் வருவார். மற்ற நாட்களில் ஈரோடு அவல் பூந்துறை, கஸ்பாபேட்டையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருப்பார்.
வழக்கம்போல கடந்த 15-ந் தேதி கரிச்சிக்காடு தோட்டத்து வீட்டுக்கு சின்னம்மாள் வந்தார். வீட்டின் முன்பக்க கதவில் அவர் போட்டிருந்த பூட்டை திறந்தார்.
ஆனால் கதவை திறக்க முடியவில்லை. உள் பக்கமாக கதவு மூடப்பட்டிருப்பதை சின்னம்மாள் உணர்ந்தார். எனவே இது தொடர்பாக கஸ்பாபேட்டையில் இருந்த தனது பேரன் கோகுலிடம் (சின்னம்மாள் மகளின் மகன்) செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார்.
அதற்கு கோகுல், ‘‘கதவின் பூட்டு பழுதுபட்டிருக்கும். நீங்கள் கஸ்பாபேட்டைக்கு வந்து விடுங்கள். நாளை (அதாவது 16-ந் தேதி) கார் பெண்டரை அழைத்து சென்று பழுது நீக்கிக்கொள்ளலாம்’’ என்று பாட்டியிடம் கூறினார்.
இதையடுத்து சின்னம்மாள் கஸ்பாபேட்டைக்கு வந்தார். நேற்று பேரன் கோகுலுடன் கரிச்சிக்காடு தோட்டத்து வீட்டுக்கு சென்றார். பழுது நீக்கி கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
எனவே பூட்டை உடைத்து கதவை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மாள் வீட்டில் வைத்திருந்த நகைகள் இருக்கிறதா? என்று பார்த்தார்.
ஆனால் அவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 2 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர்.
கொள்ளை போன தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தோட்டத்து வீட்டுக்கு சின்னம்மாள் வருகிறார் என்பதை நோட்ட மிட்டே மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வந்து மாடியில் ஏறி அங்கு கிரில் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
கொள்ளையடிக்கும் போது யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காகவே உள் பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டு நகை, பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த தும்பலஅள்ளி நடுகொட்டாயில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது75).
தனியாக வசித்து வந்த இவர் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உடனே கதவை தட்டி பார்த்த போது கதவு திறக்கவில்லை. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது சின்னம் மாள் எந்தவித அசைவும் இல்லாமலும் இருந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சின்னம்மாள் படுக்கையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் அவர் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.
இந்த சம்பம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நோட்டமிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை தராததால் மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்